அகத்திக் கீரையின் மத்துவம் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத அற்புத மருத்துவ குணங்கள்!

0
433

உங்கள் உடலின் உஷ்ணம் குறையவும் மற்றும் இளநரை ஏற்படுவதையும் தடுக்கவும் அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் வைத்து ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் போதும்.

அகத்திக் கீரையின் சாற்றில் சிறிதளவு உப்பு கலந்து குடித்து வந்தால் வாந்தி ஏற்பட்டு உங்கள் உடலில் உள்ள பித்த நீர் வெளியாகும். இதனால் உங்கள் உடலில் உள்ள பித்ததின் அளவு குறையும். இக் கீரையை நன்றாக அரைத்து உடலில் உள்ள ஆறாத நாள் பட்ட புண்களின் மீது தடவி வந்தால் விரைவில் அவை ஆறிவிடும்.

அகத்தி பூவைச் நன்றாக சமைத்து உண்டு வர மலச்சிக்கல்கள் குறையும். அகத்தி இலைச் சாற்றை (சாப்பட்டிற்க்கு முன்) வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்தி வந்தால் ஒரு மாதத்தில் இருமல் குறைந்து காணாமல் போகும்.

தேன் மனிதனுக்கு மிகச்சிறந்த மருந்தாகும் இதனை அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாற்றோடு அதே அளவு தேன் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும்.

அகத்திக் கீரையுடன் சரி சம அளவு சுத்தமான தேங்காய் பூ சேர்த்து அரைத்துச் அதன் சாறு எடுத்து அதனுடன் கொஞ்சம் மஞ்சள் தூளும் சேர்த்து உடலில் உள்ள கரும்பட்டை, சிரங்கு, தேமல், சொறி போன்றவற்றிற்க்கு பற்றுப்போட்டால் அவை முழுமையாக காணாமல் போய்விடும்.

அகத்திக் கீரை, மஞ்சள் மற்றும் மருதாணி இலை இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துத் கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புகளுக்கு தடவினால் பித்த வெடிப்பு குணமாகும்.

Article By: Newsjaffna.lk