அமெரிக்காவில் விருதுகளை பெற்ற திருகோணமலைத் தமிழ் மாணவி!

4
413

திருகோணமலை நகரைச்சேர்ந்த “தர்சிகா விக்கினேஸ்வரன்” என்னும் தமிழ் மாணவி அமெரிக்காவில் கிளெம்சோன் பல்கலைக்கழகத்தில் 2019ம் வருடாந்த மேல் எழுந்து வரும் தலைவர்கள் விருதை வென்றுள்ளார் என்பது மிகவும் மகிழ்சியான செய்தியாக அமைகிற்து.

தர்சிகா விக்கினேஸ்வரன்

தர்சிகா விக்கினேஸ்வரன் என்பவர் யாழ் பல்கலைக்கழத்தின் 2018ம் ஆண்டு பொறியியல் பிரிவில் முதல் தர வகுப்பில் () சித்தி பெற்றவர் என்பது குரிப்பிடத்தக்க விடையமகும்.

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்த சூழ்நிலைமையால் பல்கலைக்கழக தனது கல்விப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் இருந்து அவர் தொடர்ச்சியாக பல நிச்சயம் அற்ற சூழ்நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிட்டது என்பதும் குறிப்பிட தக்க விடையமாகும்.

இலங்கையில் பொறியியல் கல்விப் பீடத்துக்குச் தர்சிகா சென்றபோது தர்சிகாவின் திறமையை “சவுத் கரோலினாவிலுள்ள” கிளெம்சோன் என்னும் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் அவதானித்துள்ளார். பொறியியல் கல்வியில் திறமைசாலியாக விளங்கிய தர்சிகா ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்று விழங்கி இருந்தார். இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் “நடராஜா ரவிச்சந்திரன்” என்பவரே அவர் அமெரிக்காவில் உயர் கல்வியைத் தொடர்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தார்.

தற்போது “கிளென்” திணைக்களத்தில் விஞ்ஞான முதுமாணி என்ற பட்டத்தினை பெற்றிருக்கும் தரசிகா விக்கினேஸ்வரன், புவியியற் தொழில்நுட்பப் பொறியியல் கல்வியையும் பூர்த்தி செய்துள்ளார். இவர் பேராசிரியராக வரவேண்டும் என்ற‌ நம்பிக்கையுடன் கலாநிதி பட்டக்கல்வியைத் தொடரவுள்ளாராம்.

நன்றி

Article By: Newsjaffna.lk

4 COMMENTS

Comments are closed.