கொரோனா தொற்று வைரசை எதிர்த்து ஆரோக்கியம் தரும் கபசுர குடிநீரை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

0
368

கொரோனா வைரசை எதிர்த்து ஆரோக்கியம் தரும் கபசுர குடிநீரை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

கபசுர குடிநீர் தயாரிக்க தேவையான பொருட்கள்:

 • சுக்கு
 • திப்பிலி
 • லவங்கம்
 • சிறுகாஞ்சொறி வேர்
 • அக்கரகாரம்
 • முள்ளிவேர்
 • கடுக்காய்த் தோல்
 • ஆடாதொடா இலை
 • கற்பூரவள்ளி இலை
 • கோஷ்டம்
 • சீந்தில் கொடி
 • சிறு தேக்கு
 • நிலவேம்புக் சமூலம்
 • வட்டத்திருப்பி வேர் (பாடக்கிழங்கு)
 • முத்தக்காசு (கோரைக்கிழங்கு)

ஆகிய 15 மூலிகைகளை தலா 35 கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும் அவற்றை நன்கு சுத்தம் செய்து இடித்து அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் 200 மிலி நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து அதற்குள் நீங்கள் தயாரித்த சூரணத்தில் இருந்து 5 கிராம் எடுத்து, கொதிக்கும் நீரில் போட வேண்டும். அதற்கு பின்பு நீரானது 50 மிலி அளவு வரும் வரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

வடிகட்டிய இந்த நீரை தினமும் 2 அல்லது 3 வேளை குடிக்கலாம். இந்த கபசுர குடிநீரை குடிக்கும் போது மட்டுமே தயாரிக்க வேண்டும். குறிப்பாக தயார் செய்த 3 மணிநேரம் கழித்து குடிக்கக்கூடாது. கபசுர குடிநீரை வாரத்திற்கு 3 நாட்கள் குடிக்கலாம். அதுவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிப்பது போதுமானது. சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், தவறாமல் இந்த பானத்தை குடிக்க வேண்டும். குறிப்பாக இந்த கபசுர குடிநீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது.

கபசுர குடிநீரை எல்லாரும் குடிக்கலாம் அதாவது 1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் 5 மில்லியும், 5 முதல் 12 வயது வரை உள்ள பிள்ளைகள் 10 மில்லியும், 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் 30 முதல் 50 மில்லியும் குடிக்க வேண்டும்.

கபசுர நீரை நாள்பட்ட உடல்நல பிரச்சனை உள்ளவர்கள் குடிக்கும் முன், மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு அருந்துவது நல்லது. சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் அனுமதி இன்றி பயன்படுத்த வேண்டும். கபசுர குடிநீரை 1 வயதுக்கு உட்பட்ட‌ குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், டைபாய்டு காய்ச்சல் இருப்பவர்கள், வயிற்றுப் போக்கால் அவஸ்தைப்படுபவர்கள் குடிக்க வேண்டாம்.