உங்கள் வீட்டில் கட்டாயம் வசம்பு வைத்திருங்கள். நம்முடைய முன்னோர்கள் பாவித்த அற்புத மூலிகை!

0
450

உங்கள் வீட்டில் கட்டாயம் வசம்பு வைத்திருங்கள். நம்முடைய முன்னோர்கள் பாவித்த அற்புத மூலிகை!

நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கட்டாயம் வசம்பு எப்போதும் வைத்திருப்பார்கள் காரணம் பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு ஏன் தெரியுமா குழந்தைகள் சாப்பிடும் உணவால் அலர்ஜியோ விஷத்தன்மையோ குழந்தைக்கு பரவக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்தார்கள்.

அதனால் தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் வசம்பு என்பது குழந்தைகளுக்கு மட்டும் கொடுக்கப்படும் ஒன்று என்று. ஆனால் அது அப்படியல்ல. வசம்பு பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் முறிக்க‌க்கூடிய வல்லமை கொண்டது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம்.

எல்லா வகையான தொற்று நோய்களையும் போக்க வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிடவேண்டும்.

வசம்பு எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்ககூடிய ஒன்றாகும். வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு இரண்டு, மூன்று டீஸ்பூன் உடனேயே கொடுத்தால் உள்ளிருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்து விடும்.

பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் வசம்பை பயன்படுத்துகின்றனர்.

வசம்பு பசியைத் தூண்டி சோம்பலைத் தீர்க்கும். காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பதால் குழந்தைகளுக்கு பசியின்மையோ அல்லது சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே வசம்பை செல்லமாக பிள்ளை வளர்ப்பான் என்று அழைப்பார்கள்.

நன்றி

Article By: Newsjaffna.lk