உடலிலி நோய் எதிர்ப்பு சக்தியை பன்மடங்கு அதிகரிக்க குப்பைமேனி இலைகளை இப்படி சாப்பிடுங்கள்!

0
195

உடலிலி நோய் எதிர்ப்பு சக்தியை பன்மடங்கு அதிகரிக்க குப்பைமேனி இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.

குப்பைமேனி தொற்று நோய்கள் சுலபத்தில் உடலை தாக்காதவாறு பாதுகாப்பதோடு தோலில் தொற்று கிருமிகளால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.

குப்பைமேனி காரத்தன்மை, ரசாயன தன்மை கொண்ட இயற்கை வேதிப்பொருட்கள் உள்ளதால் குப்பைமேனி இலைகளின் சாற்றை சொறி, சிரங்கு, படை, தோல் அரிப்பு போன்ற தோல் சார்ந்த நோய்களுக்கு தடவி வந்தால் நுண்கிருமிகள் அழிந்து, நல்ல சுகம் கிடைக்கும்.

குப்பைமேனி இலைகளை நன்றாக அரைத்து புண்களின் மீது பற்று போட்டு வந்தால் நீண்ட நாட்களாக ஆறாத புண்களும் விரைவிலேயே மாறுவதோடு புண்கள் மூலம் தழும்புகள் ஏற்படுவதையும் குறைக்கும்.

அரை டீஸ்பூன் குப்பைமேனி சாறுடன், உப்பு கலந்து வாரத்திற்கு இரு முறை பருக நெஞ்சில் இருக்கும் சளியை வெளியேறிவிடும்.

குப்பைமேனியை விளக்கெண்ணெய்யில் வதக்கி மூட்டு வலி இருக்கும் இடத்தில் பற்றுப் போடும்போது வலி வீக்கத்தை குறைக்கும்.

குப்பைமேனி இலைச்சாறு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அருந்துவதால் ரத்தத்தில் அதிகரித்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

முகத்தில் தேவையற்ற முடிகள் முளைப்பதை தடுக்க குப்பைமேனி இலைகளை மஞ்சள் தூள் மற்றும் கோரை கிழங்கு பொடியுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவிவர வேண்டும்.

நன்றி

Article By: Newsjaffna.lk