February 26, 2020

உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய விசித்திரம்! பெற்றோரே அமைத்துக்கொடுக்கும் காதல் குடில்!

கம்போடியா நாட்டில் கெரூங் என்ற ஒரு பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மனிதனிற்கு தேவையான மிக முக்கியமான விஷயங்களான உணவு, இருப்பிடம் ஆகியவற்றை இயற்கைக்கு தீங்கு விளைவிக்காமல் இந்த பழங்குடிமக்கள் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மக்கள் பெண்கள் தொடர்பில் வித்தியாசமான பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்து அந்த குழந்தை பருவ வயதை எட்டிவிட்டால், அந்த குழந்தையின் பெற்றோரே ஊருக்கு ஒதுக்கு புறமாக அந்த பெண் தனது துணையை தேடுவதற்காக மூங்கீல்களான ஒரு குடிசையை அமைத்து தருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

முந்தைய காலத்தில், காதல் செய்யும் ஆணும் பெண்ணும் சந்தித்து கொள்வது பெரும் சவாலாக இருக்கும். தங்களின் பெற்றோருக்கு தெரியாமல், சகோதரிகள் கண்களில் மண்ணை தூவிவிட்டு போய் காதலனை சந்திப்பது பெரும் சவாலாக அமையும். ஆனால், தற்போது காதலிக்கும் பெண் அல்லது ஆண் தங்களின் காதலனை, காதலியை சந்திக்க நினைத்த உடனே இப்போது பார்த்து விடுகின்றனர்.

ஆனால் இந்த கம்போடியா நாட்டு பழங்குடி மக்கள் தங்களின் பெண் பிள்ளைகளுக்கு தனக்கான துணையை தானே தேடிக் கொள்வதற்கு அனுமதிப்பதோடு, ஒதுக்கு புறமாக குடிசை அமைத்தும் கொடுக்கின்றனர். அந்த குடிசைக்கு காதல் குடிசை என பெயரிட்டுள்ளனர். அந்த குடிசையில் அந்த பெண் எவ்வளவு நாள் இருக்க விரும்புகிறாரோ அவ்வளவு நாள் இருந்து கொள்ளலாம். அங்கு அவருக்கு அவரது வீட்டில் இருந்து தினமும் உணவு சென்றுவிடும்.

அதுமட்டும் இன்றி அப்பகுதியில் உள்ள ஆண்களை அந்த குடிசைக்கு பெண்கள் அழைக்கலாம். இவ்வாறு இங்கு விசித்திரமாக பெற்றோரே அனுமதி கொடுப்பது பெரும் ஏனைய நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published.