ஏராளமான மருத்துவம் சார்ந்த அற்புத நன்மைகளை கொண்ட‌ அதிமதுரம்! எப்படி பயன்படுத்துவது சிறந்த பலனைத்தரும் தெரியுமா?

0
331

குடல் புண்கள் தவிர மற்றைய‌ அனைத்து வயிறு சம்மந்தமான பிரச்சினைகளும் நீங்குவதற்கு அதிமதுரப் பொடியை காலை மற்றும் இரவு வேளைகளில் எடுத்துக்கொள்ளவும் இதனால் செரிமானம் அதிகரித்து உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

அதிமதுரத்துடன், திப்பிலி பொடி சேர்த்து நீரில் ஊறவைத்து அந்த நீரை பருகிவர நாள்பட்ட இருமல், தொண்டை கரகரப்பு குணமாகி குரல் வளம்பெரும்.

மஞ்சள் காமாலை, நெஞ்சுச்சளி, தலைவலி, மஞ்சள் காமாலை, சிறுநீரகங்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்க, மூட்டு வலி போன்றவற்றிற்கு அதிமதுரம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துவருவது சிறந்தது. பெண்களுக்கு மிகச்சிறந்த நன்மைகளை அதிமதுரம் தரவல்லது. சுடு நீரில் இதன் பொடியைக் கலந்து தினமும் கூட குடிக்கலாம்.

ஆண்களுக்கு இருக்கும் ஆஸ்த்துமா, இளநரை மற்றும் ஆண்மை குறைவு சம்பந்தமான சிக்கல்களை எளிதில் சரிசெய்ய அதிமதுர தூள் கலந்த நீரை தினமும் காலை மாலை என இரு வேளைகளிலும் ஆண்கள் பருகிவர‌ வேண்டும்.

நன்றி

Article By: Newsjaffna.lk