கழுத்துப் பகுதியை சுற்றி ஏற்படும் கருமை நிறம் மறைய இவற்றை செய்யுங்கள்!

0
426

பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனை கழுத்துப் பகுதி மட்டும் கருப்பு நிறம் அதிகம் நிறைந்ததாக இருப்பதுதான். கழுத்துப்பகுதி சற்று கருப்பு நிறத்தில் இருந்தாலும் அவ்வளவாக வெளியில் தெரியாது. ஆனால் சிலருக்கு கழுத்தில், கருமை நிற வர்ணம் பூசியது போல் பளிச்சென்று வெளியில் தெரியும் அளவுக்கு கருமை காணப்படும். இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்!

தேன், எலுமிச்சை, சர்க்கரை இந்த மூன்று பொருட்களில், தேன் ஒரு சிறிய மூடி அளவும் எலுமிச்சைசாறு ஒரு சிறிய மூடி அளவும் சர்க்கரை 1/2 ஸ்பூன் என்ற அளவில் ஒன்றாகக் கலந்து தினம்தோறும் கழுத்துப்பகுதியில் நன்கு தடவ வேண்டும். அதனை பத்து நிமிடங்கள் வரை லேசாக மசாஜ் செய்து பின்பு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள். ஒரு வாரத்தில் மூன்று நாட்கள் இப்படி செய்யலாம். இந்த முறையை கை முட்டி, கால் முட்டி போன்ற இடங்களில் ஏற்படும் கருமை நிறம் போவதற்கும் பயன்படுத்தலாம்.

கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு கழுத்தில் தடவி பத்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்து விட்டு, மறுநாள் காலை அதை நன்கு கழுவி விடவும். இப்படி தொடர்ந்து 10 நாட்கள் செய்து வர கருமை நிறம் முழுமையாக உங்கள் கருத்தை விட்டுப் போய்விடும். இந்த முறையை கை முட்டி, கால் முட்டி போன்ற இடங்களில் ஏற்படும் கருமை நிறம் போவதற்கும் பயன்படுத்தலாம்.

சூரியனின் ஒளி நேரடியாக படுவதால் சருமம் கருமை நிறம் அடைந்தால், அந்த இடங்களில் எல்லாம் ஆலிவ் எண்ணையை போட்டு நன்றாக மசாஜ் செய்து அரைமணி நேரம் ஊற வைத்து அதன் பின் குளித்து வர கருமை மறையும்.

நன்றி

Article By: Newsjaffna.lk