குழந்தையை வீட்டு மலசல கூடக் குழிக்குள் போட்ட தாயாரை!

0
346

யாழ்ப்பாணம் புத்தூரில் பகுதியில் பிறந்த குழந்தையை வீட்டு மலசல கூடக் குழிக்குள் போட்ட தாயாரை அச்சுவேலிப் பொலிஸார் இன்ற்று கைது செய்துள்ளார்கள். இந்தச் சம்பவம் ஆனது புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா வீதியில் இன்று மாலை இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்.

யாழில் இடம்பெற்ற

அப் பெண்ணுக்கு கடந்த நான்கு நாள்களுக்கு முன்னர் குழந்தையை ஒன்று பிறந்துள்ள நிலையில் அக் குழந்தையை அவருடைய வீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மலசல கூடத்தின் குழியினுள் தாயார் போட்டுள்ளார்.

அது நான்கு நாள்கள் ஆகிய இருந்த படியினால் குழந்தையின் உடல் அழுகி, துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது இன் நிலையில் அயலவர்களால் இதுதொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அச் சம்பவ இடத்துக்குச் சென்ற அச்சுவேலி பொலிஸார் குழந்தையின் சடலத்தை மீட்டு தாயாரையும் கைது செய்தனர்.

விசாரணைகளின் போது அந்த பெண்ணின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளதாக மேலும் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தற்போது முன்னெடுத்துள்ளனர்.

By: Newsjaffna.lk