நரை முடி ஏற்படுவதை எப்படி தடுப்பது? எந்த ஊட்டசத்துக்கள் அவசியம்? முதுமையில் ஏற்படும் நரையை விரட்ட முடியுமா?

0
376

நரை முடி ஏற்படுவதை எப்படி தடுப்பது? எந்த ஊட்டசத்துக்கள் அவசியம்? முதுமையில் ஏற்படும் நரையை விரட்ட முடியுமா?

உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. சில குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் அதாவது வைட்டமின் பி 12, போலேட், காப்பர், இரும்பு போன்ற சத்துகள் குறையும் போது உங்களுக்கு நரைமுடி தோன்றலாம்.

இந்த வகை வைட்டமின்களை அதிகரிக்கும் மாத்திரைகள் மற்றும் உணவுகளை எடுத்துக் கொள்வதால் காலப்போக்கில் உங்கள் தலைமுடி அதன் இயற்கை நிறத்தை மீட்டெடுக்க முடியும். ஆனால் மாத்திரைகளை உட்கொள்வதற்கு முன்னர் மருத்துவ ஆலோசனை பெறுவது சிறந்தது.

வயதாகும் போது நரை முடி எப்படி உருவாகிறது?

மெலனின் என்னும் நிறமியின் இழப்பு காரணமாக வயதாகும் போது நரை முடி உண்டாகிறது. இயற்கையான சரும நிறம் மற்றும் தலைமுடியின் நிறம் என்பவற்றை தீர்மானிப்பதற்கு மெலனின் முக்கிய காரணமாகும். இயற்கையாக உண்டாகும் நரைமுடியை கருமையாக்க முடியாது. ஆனால் அவற்றை தடுக்க முடியும். உடலில் எந்த அளவிற்கு குறைவாக மெலனின் உள்ளதோ அந்த அளவிற்கு நிறம் குறைந்த தலைமுடி காணப்படும். நரை முடியை தடுப்பதற்கு நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பது அவசியம். நரை முடியை கருமையாக்கலாம் எனும் கட்டுக்கதைகளை நம்பக்கூடாது.

நன்றி

Article By: Newsjaffna.lk