புற்று நோய்க்கு அரு மருந்தாம் தூதுவளை! இன்னும் பல அற்புத மருத்துவ‌ குணங்கொண்ட தூதுவளை!

0
420

புற்று நோய்க்கு அரு மருந்தாம் தூதுவளை! இன்னும் பல அற்புத மருத்துவ‌ குணங்கொண்ட தூதுவளை!

புற்று நோய்: தூதுவளையை அடிக்கடி நீங்கள் பயன்படுத்தி வந்தால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று நோய், வாய்ப் புற்று நோய் மற்றும் கருப்பை புற்று நோய் ஆகிய அனைத்திற்கும் தூதுவளை மிகவும் நல்ல மருத்துவப் பலன் கொடுத்துள்ளது மேலும் இது ஆய்வு மூலம் வாய்ப்புற்றுக்கு மற்றும் தொண்டைப்புற்று நேய்க்கு நல்ல மருந்து என‌ நிரூபிக்கப்பட்டுள்ளது. மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் சம்மந்தமான பின் விளைவுகளுக்கான‌ புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் அவற்றை ஆரம்ப நிலையிலே இந்த தூதுவளை இலையைப் பயன்படுத்தி பூரண சுகாதார நிலையினை சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

தூதுவளை பொடியை பசும்பாலில் சேர்த்து சாப்பிட்டால் உடலில் உள்ள பித்தம் சம்மந்தமான‌ நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி உடலில் உள்ள இரத்தம் விருத்தி உண்டாகும்.

தூதுவளை இலையை பசு நெய்யில் வதக்கி துவையல் போல் செய்து வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள வாயு தொலை தீரும் மற்றும் உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையவும் மற்றும் தாம்பத்ய உறவு மேம்படவும் கூட உதவுகின்றது.

தூதுவளை பொடியை தொடர்ந்து நீங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் குணப்படும். இந்த தூதுவளை பொடியை திப்பிலிப் பொடியுடன் சரி சமமாக கலந்து தேனுடன் சேர்த்து குழைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே குறைந்டு விடும்.

தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளை இலை சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி மற்றும் இருமல் போக்கும்.

தினம் இரண்டு வேளை தூதுவளை இலைச்சாறு 100 மில்லி மற்றும் சுத்தமான பசு நெய் 30 மில்லி ஆகிய‌ இரண்டையும் சேர்த்து தூள் செய்து கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் அதில் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதற்கொண்டு கக்குவான் இருமல் வரையும் குணமாகிவுடும் இவற்றை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் இவை பத்தியம் ஏதும் இல்லை.

Article By: Newsjaffna.lk