அறிய வேண்டியவை: பூசணி விதையில் இத்தனை சத்துக்கள் உள்ளனவா? எவ்வாறான பிரசனைகெல்லாம் இதை பாவிக்கலாம்!

0
471

சர்க்கரைநோய் வராமல் தடுக்கும்: அதாவது, தாவர வகை உணவுகள் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா‍‍‍‍‍ 3 என்ற அமிலம் பூசணி விதைகளில் அதிகளவில் நிறைந்தே உள்ளன. இந்த ஒமேகா‍‍‍‍‍ 3 அமிலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் இதனால் சர்க்கரைநோய் வராமல் தடுக்கும் முடியும்.

பூசணி விதை

ஆண்மைத் தன்மையை அதிகரிக்கச் செய்ய‌: பூசணி விதைகள் ஆண்களின் பாலியல் ஹார்மோன்களைத் தூண்டி அதன் மூலம் ஆண்மைத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. இந்த பூசணி விதைளை பொடி செய்து அதனை பாலில் கலந்து தினந்தோறும் குடித்தால் நம் உடல் உள்ள‌ உஷ்ணம் குறைந்த்து ஆண்களின் விந்தணுக்களின் திறன் அதிகரிக்கும்.

இது ஆண்களுக்கு மட்டும் அன்றி பெண்கள் இந்த விதைகளை நெய்யில் சிறிதளவு வறுத்து தினந்தோறும் சாப்பிட்டுவந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் மற்றும் வலி, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

பூசணி விதையில் வைட்டமின் இ மற்றும் இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதம் போன்ற சத்துகள் நிறைவாகவே உள்ளன. மேலும் இதில் தாமிரம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம் ஆகிய அத்தியாவசியமான தாதுச்சத்துகளும் நிறைவாக உள்ளன.

இவற்றில் உள்ள மக்னீசியச் சத்துகள் நமது உடம்பில் உள்ள ரத்த அழுத்தத்தை குறைத்து நமது இதய ஆரோக்கியத்தைக் பேணி காக்க உதவும். தினந்தோறும் ஒரு கப் பூசணி விதைகளைச் சாப்பிட்டால் நமது அன்றைய நாளுக்கான‌ முழுமையான‌ மக்னீசியம் கிடைத்து விடும்.

Article By: Newsjaffna.lk