பூரான் கடிதான் என்று அலட்சியம் வேண்டாம்! இவ்வாறான வீட்டு மருந்து வகைகளை எடுத்து கொள்ளலாம்!

0
418

பூரான் என்பது விஷ ஜந்துக்களில் ஒன்றாகும் இது மற்ற விஷ ஜந்துக்கள் போல் அல்லாது கடிக்கும்போது வலியே தெரியாது காணப்படும் ஆனால் இரண்டு நாட்களின் பின்பே உங்களது உடலில் கடித்த இடங்களில் அதிக படியான தடிப்பும் அரிப்பும் மற்றும் எரிச்சலும் காணப்படும்.

பூரான் கடிச்சா

உடலில் உள்ள தடிப்புகளின் அளவிற்கேற்ப நாம் ஊணர்ந்து கொள்ள முடியும் பூரானின் கடி மற்றும் உடலில் அதனால் எற்ற்பட்ட விஷத்தின் அளவு. தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்படும் இடத்தில் சொறிந்தால் புண் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பூரான் கடித்துவிட்டால் பனை வெல்லாம் சாப்பிடுதல் முதற் சிறந்ததாகும். தடிப்பு ஏற்பட்ட இடங்களில் உடனே மண்ணெண்ணெயை பூசி நன்றாகத் தேய்க்கத்துக்கொள்ளவது தடிப்புகளை மறைய செய்யும்.

பூரான் கடிக்கு எவ்வாறான மருந்து வகைகளை எடுத்து கொள்ளலாம் என்று பார்போம்!

குப்பைமேனி மருத்துவம்: பூரான் கடிக்கு குப்பைமேனி மருத்துவம் மிகசிறந்ததாகும். குப்பைமேனி இலையுடன் சிறிதளவு உப்பையும், மஞ்சள் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும் பின்னர் பூரான் கடித்த இடம் முழுவதும் நன்றாகப் பூசி ஒருமணி நேரத்தின் பின்னர் சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். இவ்வாறாக மூன்று நாட்கள் காலையில் செய்து வர பூரான் கடியால் ஏற்பட்ட‌ தடிப்பும் மற்றும் அரிப்பும் மறையும்.

வெற்றிலை மருத்துவம்: வெற்றிலைச் சாற்றினை சுமார் 06 அவுன்ஸ் அளவு எடுத்து அதனுடன் 35 கிராம் அளவு மிளகினை ஒருநாள் முழுவதும் ஊற வைத்து நன்றாக ஊறிய பின்னர் மிளகை எடுத்து நன்றாக உலர்த்திப் பொடி செய்து ஒரு சீறிய கண்ணாடி பாத்தினுள் போட்டு வைக்கவும். இவ்வாறாக தயாரித்த இந்த மருந்தினை தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளையும் ஒரு ஸ்பூண் அளவு எடுத்து வென்னீரில் கலந்து பருக வேண்டும். (குறிப்பாக உப்பு மற்றும் புளி ஆகிய இரண்டையும் சேர்க்கவே கூடாது).

நன்றி

Article By: Newsjaffna.lk