மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளை ஊக்கப்படுத்த உலக வங்கியின் உதவி வழங்க ஏற்பாடு !

0
107

விவசாயிகளுக்கு உலக வங்கியின் உதவி வழங்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை!

வறுமையான மக்கள் வாழும் மாவட்டங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சு விவசாயிகளுக்கு உலக வங்கியின் உதவி வழங்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கமைவாக நவீன தொழிநுட்பத்துடன் விவசாயத்தில் ஈடுபாடு காட்டி வருகின்ற‌ மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளை ஊக்கப்படுத்த இந்த திட்டம் அம்பாறை, மட்டக்களப்பு, பதுளை, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அரசாங்கத்தினால் தற்போது அமுல்படுத்தப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு தெரிவிக்கின்றது.

அரசாங்கத்தின் இந்த உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான அறிவூட்டல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கும் விசேட செயலமர்வொன்று நேற்று மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

newsjaffna.lk