மருத்துவகுணம் நிறைந்த சுண்டைக்காய் வற்றலுடன் கறிவேப்பிலை, மிளகு, சீரகம், வெந்தயம் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

0
418

சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. சுண்டைக்காயின் இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கும் குணம் கொண்டது. இதன் கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களை குணமாக்கும்.

உடல் பருமனை குறைக்க சுண்டைக்காய் வற்றலை பொடி செய்து தினமும் ஐந்து கிராம் பொடியை காலையில் சாப்பிட வேண்டும்.

சுண்டைக்காயை அடிக்கடி சமையலில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சுண்டைக்காய் வற்றலுடன் மாதுளையின் ஒடு சேர்த்து அரைத்து தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் சக்கரை நோய் குணமாகும்.

தைராய்டு உள்ளவர்கள் அதை குணப்படுத்த சுண்டைக்காய் வற்றல், சீரகம், சோம்பு ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலை, மாலை இரு வேளை தலா இரண்டு கிராம் சாப்பிட வேண்டும்.

சுண்டைக்காய் வற்றலுடன் கறிவேப்பிலை, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியன சம அளவு எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து தினமும் காலையில் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பசியின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம்குடல் பூச்சிகள் ஒழியும்.

சுண்டைக்காய் வற்றல் எப்படி செய்வது:

சுண்டைக்காயை நீரால் சுத்தம் செய்து பின் கத்தியால் வெட்டி கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடங்கள் போட்டு பின் நீரை வடித்துவிட்டு ஒரு நாள் முழுவதும் அதை மோரில் ஊற வைத்து மறுநாள் சுண்டைக்காயை மட்டும் வடித்து எடுத்து வெயிலில் நன்றாக‌ காய வைக்கவும். பகலில் வெயிலில் காய வைத்து இரவு முழுவதும் மோரில் சுண்டைக்காயை ஊற வைக்கவும், இப்படி நான்கு நாட்கள் தொடர்ச்சியாக வற்றலாகும் வரை செய்யவும்.

நன்றி

Article By: Newsjaffna.lk