April 6, 2020

லண்டனிலிருந்து சென்ற விமானத்தில் 2 சாம்பியன்களுக்கு ஏற்பட்ட நிலை! உதவி செய்த இளம் பெண்ணுக்கு நன்றி என நெகிழ்ச்சி!

லண்டனிலிருந்து புறப்பட்ட விமானத்தில் வலுவான மனிதர்கள் என்ற சாம்பியன் பட்ட இரண்டு பேர் தங்களுடை சீட்டில் சரியாக உட்கார முடியாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனிலிருந்து ஸ்காட்லாந்திற்கு குறைந்த அளவே டிக்கெட் அதாவது பட்ஜெட் விமானம் ஒன்றில் 2017-ஆம் ஆண்டு உலகின் வலுவான மனிதர் என்ற பட்டம் வென்ற எட்டி ஹால் மற்றும் நான்கு பிரைன் தி பீஸ்ட் ஷா சென்றுள்ளனர்.

அப்போது விமானத்தில் இரண்டு பேரும் அடுத்தடுத்த சீட்டில் உட்கார்ந்த போது, மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.

இதைக் கண்ட தனியாக சீட்டில் இருந்த பெண் ஒருவர் தன்னுடைய சீட்டை ஷாவிற்கு கொடுக்க, அவர் எட்டி ஹாலிடம் உட்கார்ந்துள்ளார்.

இதை பிரைன் எட்டி ஹால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதுடன், அந்த பெண்ணிற்கு என்னுடைய நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.