‘வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே’ என்ற பழமொழி இதனால் தான் உண்டானது என்று உங்களுக்கு தெரியுமா?!

0
402

இந்த அற்புத மூலிகைகீரை வல்லமை மிக்க கீரை என்பதால் தான் வல்லாரை எனப் பெயர் பெற்றது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகள் இந்த கீரையில் அதிகமாக உள்ளதால் இதற்கு ‘வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே’ என்ற பழமொழி ஏற்பட்டது.

வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன அது மட்டுமல்லாது இரத்தத்திற்கு தேவையான ஏராளமான‌ சத்துக்கள் நிறைந்துள்ளது.

வல்லாரைக் கீரை மத்திய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தக் கூடியதாக விளங்குவதால் வெரிகோஸ் வெயின் என்று சொல்லக் கூடிய கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினைக்கும் இந்த வல்லாரை ஒரு மிக சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.

வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் நரை முடி பிரச்சனைக்கு வல்லாரையின் விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து இளமை தோற்றம் ஏற்படும்.

வல்லாரை கீரையுடன் மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து பதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.

வல்லாரைப் பொடியை பயன்படுத்தி பல் துலக்கி வந்தால் பல்லிலுள்ள கறைகள் நீங்குவதோடு பல் வெண்மை ஆகும். மேலும் பல் ஈறுகள் பலப்படும்

வல்லாரையின் அற்புத திறன் என்ன தெரியுமா, கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்றவற்றை போக்கி கண் நரம்புகளுக்கு பார்வைத்திறனை அதிகரிக்கிறது.

யானைக்கால் நோய் உள்ளவர்கள் வல்லாரைக் கீரையை தொடர்ந்து காலில் வைத்து கட்டி வந்தால் யானைக்கால் நோய் வீக்கம் படிப்படியாக குறைந்து எளிதில் குணம் கிடைக்கும். வல்லாரை கீரையை அரைத்து அதை சாப்பிட்டு வந்தால் விரை வீக்கம், வாயு வீக்கம், தசை சிதைவு போன்றவை குணமாகுவதோடு உடலில் ஏற்படும் கட்டிகள், புண்கள் ஆகியவற்றை சரி செய்து விடும் ஆற்றல் வல்லாரைக்கு உண்டு.

நன்றி

Article By: Newsjaffna.lk