வீட்டிலே இலகுவாக செய்யக்கூடிய சில பயனுள்ள இயற்கை மருத்துவ குறிப்புகள் !

0
149

நாட்பட்ட ஆறாத புண்கள் இருப்பவர்கள் விரலி மஞ்சலை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் குழப்பி காலையிலும் இரவிலும் பற்று போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

உடம்பு வலி உள்ளவர்கள் சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகி வந்தால் தீரும்.

பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு நீங்கிவிடும்.

நெருப்பு அல்லது சுடுநீர் பட்டுவிட்டால் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறைவதோடு கொப்பளம் ஏற்படுவது தடுக்கப்படும்.

கர்ப்பகாலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் வாந்தி நிற்பதோடு உடல் வலுவாகி பித்த நோய்கள் தீர கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர வேண்டும்.

வயிற்றுப்புண் குணமாவதற்கு பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வரவும்.