வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை பயன்படுத்தி முகத்தின் கரும்புள்ளிகளை இலகுவாக‌ போக்கும் எளிய வழிமுறைகள்!

0
284

பட்டையை பொடி செய்து அதனுடன் தேன் கலந்து இரவு படுக்கும் போது கரும்புள்ளிகள் மீது தடவி காலையில் எழுந்து கழுவினால் கரும் புள்ளிகள் மறைந்துவிடும்.

இஞ்சி துண்டு ஒன்றை முகத்தில் 5-10 நிமிடம் தேய்த்து இளம் சுடு நீரில் முகத்தை கழுவ வேண்டும். ஒரு நாளைக்கு 2 தொடக்கம் 3 முறை இப்படி செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.

பாதாமை இரவில் பாலில் ஊற வைத்து பின் காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, 10 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு மீண்டும் பாலை முகத்தில் தடவி மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

முகத்திற்கு 10 நிமிடம் ஆவிப்பிடித்து பின்பு வெள்ளரிக்காயை அரைத்து முகத்திற்கு தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்து கழுவி வர கரும்புள்ளிகள் எளிதில் நீங்கி முகமும் பொலிவு பெறும்.

5தொடக்கம் 6 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து பின் அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் மென்மையான மசாஜ் செய்து ஆவி பிடித்து ஈரமான துணியால் துடைக்கவும் இப்படி செய்துவர‌ கரும்புள்ளிகள் எளிதில் நீங்கிவிடும்.

உருளைக்கிழங்கை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

கொத்தமல்லியை அரைத்து, அதனுடம் மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 தொடக்கம் 20 நிமிடங்கள் ஊற வைத்து லேசாக மசாஜ் செய்து வெதுவெதுப்பான‌ நீரில் முகத்தை அலச வேண்டும்.

முள்ளங்கி சாற்றை முகத்தில் தடவி மசாஜ் செய்து உலர வைத்து முகத்தை கழுவி வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.

நன்றி

Article By: Newsjaffna.lk