ஹற்றனில் மண்சரிவு மக்கள் இடம்பேர்வு! மக்களுக்கு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

0
83

மலை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை!

மலை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் தோட்டப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் 6 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களை சுகாதார முறையில் செனன் தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான் அத்தியாவசியப் பொருட்களை அம்பகமுவ பிரதேச செயலகத்தின் ஊடாக தோட்ட கிராம சேவகர் வழங்கி வருகிறார். அடுத்து வரும் நாட்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதால் அபாய வலயத்தில் இருந்த 6 குடும்பங்களும் வெளியேற்றப்பட்டுள்ளன. மேலும் தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

newsjaffna.lk